அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் சங்க தலைவர் யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.