Take a fresh look at your lifestyle.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

38

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் விசேட சேவைக் கருதி மேல் மாகாணத்தில் திறக்கப்பட்டிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவை, பாதுகாப்புச் சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் எரிபொருள் தேகைளுக்காக இவ்வாறு எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் என அந்த கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 62 நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 நிலையங்களும், களுத்துறை மாவட்டத்தில் 27 பெற்றோல் நிலையங்களும் இவ்வாறு திறக்கப்படடிருக்கும் என அந்த கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

தெரிவுச்செய்யப்பட்ட திறந்திருக்கும் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் பற்றிய கூடுதல் விபரங்களை www.ceypetco.gov.lk என்ற வலைத்தளத்தில் காணலாம்