மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி லிந்துலை, தலவாக்கலை நகர சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் லெட்சுமணன் பாரதிதாசன் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிக்கை இன்று (29) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் லிந்துலை, தலவாக்கலை நகர சபையின் புதிய தலைவராக பதவி பொறுப்பேற்றுக் கொண்ட பாரதிதாசனுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், இ.தொ.கா ஸின் பிரதி தலைவர் அனுசா சிவராஜா, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பிலிப்குமார் மற்றும் லிந்துலை, தலவாக்கலை நகர சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.