கம்பஹா மாவட்டத்திற்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளுக்கு எதிர்வரும் 02ஆம் திகதி காலை 05மணிவரை மாத்திரமே ஊடங்கு தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.