நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் நுழைவு பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கும் தொழில் அமைச்சின் சாரதி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கட்டிடத்தின் அடித்தளத்தில் உணவகத்தினை நடத்தி சென்றவர் அண்மையில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்த நிலையில் அவரின் ஊடாக இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
உணவகத்தின் உரிமையாளர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போதும் அவருக்கு தொற்று ஏற்படவில்லை.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது அவருக்கு குறித்த சாரதியால் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேரும் குறித்த சாரதியுடன் தொடர்பை பேணியிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.
அத்துடன்,இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் மேல் மாகாணத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மூடுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரஃப் விடுத்துள்ளார்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.