Take a fresh look at your lifestyle.

கல்கிஸ்ஸ கடலில் காணாமல் போன இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது

65

கல்கிஸ்ஸ கடற் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நேற்று (23) தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போயுள்ள இருவரையும் தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் நேற்று பிற்பகல் 2.45 மணிஅளவில் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

13 பேர் கொண்ட குழுவில் 7 இளைஞர்களில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் 5 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமற்போன ஏனைய 2 இளைஞர்கள் இன்னும் காண்டுபிடிக்கப்படவில்லை எனவும், அவர்கள் 18 மற்றும் 19 வயதுடைய பூண்டுரோய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.