பிரெண்டிக்ஸ் மற்றும் பேலிகொடை கொத்தணியின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,232ஆக உயர்வு
புதிதாக கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள்.
ஏனைய 291 பேரும், கொவிட்19 நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் 8 ஆயிரத்து 706 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுறுதியான 4 ஆயிரத்து 647 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் பிரெண்டிக்ஸ் மற்றும் பேலிகொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் இருந்து அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது.
rn
தனியார்துறை ஊழியர்களுக்கு வேதனம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற்சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலின்மை காரணமாக, ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிடுவதால், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்த வேதனத்தின் அடிப்படை வேதனத்தின் 50 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபா என்ற இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்த வேண்டும்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை இவ்வாறு செயற்படவும், அந்த செயலணி உடன்பாடு தெரிவித்துள்ளதாக தொழில் அமைச்சர் முன்வைத்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.
இதேவேளை, ருமேனியா மற்றும் ஸ்பெயினில் இலங்கை தூதரகங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ருமேனியா மற்றும் இலங்கைக்கு இடையில் 1957 ஆம் ஆண்டிலிருந்து இராஜதந்திர உறவுகள் காணப்படுவதோடு தற்போது இரு நாடுகளுக்குமிடையே ஆரோக்கியமான இருதரப்பு தொடர்புகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கைக்கும் ஸ்பெயினுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் 1955 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.