இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் சிலர், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை கடற்படையினர் மறுத்துள்ளனர்.
தமிழ்நாடு ராமேஸ்வரத்தைச்சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கற்கள் கொண்டு தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இதில் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.