இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு நாடு முடக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் தேயிலை கொழுந்து பறிக்கப்பட்ட அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
எனினும் முடக்கல்நிலை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் அதிக அளவான கொழுந்து இலை பறிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் மாதம் 21.91 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி இடம்பெற்றுள்ளது.
கடந்த 9 மாதங்களில் இலங்கையில் 201.13 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.