Take a fresh look at your lifestyle.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாளை இலங்கைக்கு விஜயம்

19

ஆசிய நாடுகளுக்கான அதிகாரபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவை வந்தடைந்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அவரின் ஆசிய விஜயம் அமைந்துள்ளது.

இதன்போது, இந்தியா, இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தோனோஷியா முதலான நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார்.

இன்றைய தினம் இந்தியாவை வந்தடைந்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையில் அமைச்சர் மட்டத்திலான முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், பொம்பியோவின் இந்திய விஜயத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய சில உடன்பாடுகள் எட்டப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், நாளைய தினம் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளைய தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ சந்திக்கவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் நாளை மற்றும் நாளை மறுதினமும் பொம்பியோ தமது இலங்கை விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, ஒப்பந்தங்கள் எதனையும் இலக்கு வைத்து, மைக் பொம்பியோ இலங்கை வரவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் ஜீஎல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையிலான பரஷ்பர தொடர்புகளை வலுவூட்டும் வகையில் இவ்வாறான விஜயங்கள் இடம்பெறுவது வழமையானதாகும்.

எனவே மைக் பொம்பியோவின் விஜயமும் அவ்வாறான ஒன்றுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை வருகின்ற அமெரிக்க ராஜங்க செயலாளரிடம், இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திரசில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்க வலியுறுத்துமாறு அரசாங்கத்திடம் எதிர்கட்சித் தலைவா சஜித் பிரேமதாச கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.