Take a fresh look at your lifestyle.

ஒரே பிரச்சினைக்காக ஒன்றிணையவுள்ள மூன்று அமைச்சுக்கள்

43

நாட்டிலுள்ள அனைத்து சரணாலயங்கள் மற்றும் வன மண்டலங்களுக்கு உரித்தான நிலங்களை கணக்கெடுத்து அவற்றை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆகிய முத்துறைசார் அமைச்சுக்களின் அமைச்சர்கள் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைப்பார்கள் என குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, எல்லைப் பகுதிகள் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதன் காரணமாகவே இவ்வாறு வனப்பகுதிகளுக்கு உரிதான் நிலங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.