Take a fresh look at your lifestyle.

LTTE யின் தடை தொடர்பிலான தீர்ப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை

16

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையகம் நேற்று வழங்கிய தீர்ப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அரசாங்கம் இந்த விடயம் குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள வெளிநாட்டு அமைச்சு, எப்படியிருப்பினும், அரசாங்கத்திற்கும் பிருத்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையகத்துடன் தொடர்பில்லை.

கடந்த 2019 மார்ச் மாதம் 8 ஆம் திகதி தமிழீழ விடுதலப் புலியக் பயங்கரவாத அமைப்பென பிரித்தானிய உட்துறை செயலரினால் தெரிவிக்கப்பட்ட விடயத்திற்கு சகல தகவல்களையும் வழங்கியதன் மூலம் அரசாங்ம் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.

வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கடந்த 2019 மே மாதம் மேல் முறையீட்டிற்கு அமைவாகவே நேற்றைய தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத கொள்கையினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்னை என்பன குறித்து அரசாங்கம் அவதானமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சர்வதேச சமூகத்திற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒத்துழைப்பினை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்றை தீர்ப்பு தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.