Take a fresh look at your lifestyle.

19 ஆவது திருத்தத்தின் காரணமாக நாடு முடக்க நிலையை அடைந்துள்ளது

34
19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தெரிவித்துள்ள கூற்றின் மூலம் இது தெளிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 20 ஆவது அரசியல் யாப்பு திருத்த விவாதத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முன்னைய ஜனாதிபதி தற்போது கூறுகின்றார் தனது ஜனாதிபதி பதவி காலப்பகுதியில் அரசாங்கத்தை நிர்வகிக்க முடியவில்லை என்று. இதற்கு மேலும் சாட்சியம் வேண்டுமா? அன்று சிறந்தவை என்று குறித்து பேசுபவர்கள் இன்று என்ன கூறுகின்றார்கள்?

நாட்டை பாதுகாக்க முடியவில்லை. ஜனநாயக ரீதியில் பயணிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் நாட்டை ஜனநாயக ரீதியில் எவ்வாறு முன்னோக்கி இட்டு செல்வது. இவற்றை எல்லாம் சரிசெய்வதற்கே 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நாம் முன்வைக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன : நாட்டின் ஜனநாயகத்தை கட்டிகாப்பதற்கு 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம், சட்டம், நீதி துறை ஆகியன சமனான அதிகாரத்தை கொண்டு இருந்தாலே நாடு முன்னோக்கி பயணிக்க முடியும். இது முறையாக இல்லாவிட்டால் நாடு பின்னோக்கியே செல்லும். நாடு பின்னோக்கி செல்வதற்கே இந்த 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் வழிவகை செய்யும் என தெரிவித்தார்.

இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நல்லாட்சியுடன் கூடிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடுகளில் ஜனாதிபதி முறைமை கிடையாது பிரதமர் முறையே காணப்படுகின்றது.

தனியொரு நபருக்கு மிதமிஞ்சிய அளவில் அதிகாரத்தை ஒருமுகப்படுத்தும் முயற்சியாகவே 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்தை நாம் நோக்குகின்றோம்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியல் அமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட்டு, பாராளுமன்ற பேரவை உருவாக்கப்பட உள்ளது.

19 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களம்