Take a fresh look at your lifestyle.

186 பேர் பூரண குணம்

18
மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி, இதுவரை மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 2508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.