தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அலுவலக ஊழியர்கள் தங்களது உத்தியோக அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட ஆவணங்களை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.