இந்த விவாதங்கள் நாளைய தினமும் இடம்பெறவுள்ள நிலையில் நாளை மாலை வாக்கெடுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால் இரு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கக்படமாட்டாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவில் அவருக்கு நாளைய தினம் அமர்வில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.