மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலேயே மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அமைந்துள்ளது.
குறித்த அதிகாரி கொவிட் அறிகுறிகள் காரணமாக கடந்த தினம் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொற்றுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் ஏனைய அதிகாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.