Take a fresh look at your lifestyle.

முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

52

800 திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியினை விலகிக்கொள்ளுமாறு இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கை ஒன்றை விஜய் சேதுபதி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் ஊடாக, தனது சுயசரிதை திரைப்படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ் நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையினை வெளியிடுவதாக முரளி தெரிவித்துள்ளார்.

தவறான புரிதல் காரணமாக 800 திரைப்படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை தான் அறிவதாகவும், தன்னால் தமிழ் ஒரு கலைஞன் பாதிப்படைவதை விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் விஜய்சேதுபதியின் கலை பயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது.

ஆகவே அதனை கருத்திற்கொண்டு அவர் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

எனினும் இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும், அதற்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை விஜய்சேதுபதி தனது உத்தியோகபூர்வு ட்விட்டர் கணக்கில் நன்றி,வணக்கம் என மட்டும் பதிவிட்டு வேறு எந்த கருத்தினையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.