கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.