தலவாக்கலை நகரில் அமைந்துள்ள சில்லறை விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீவிபத்து இன்று காலை (18) ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் லிந்துலை நகரசபையின் தீயணைப்பு படையினர், பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து குறித்த தீப்பரவலைக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Prev Post