Take a fresh look at your lifestyle.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியருக்கும் கொரோனா

60

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஐவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த ஆடைத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில், இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,483ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 211 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 3,259 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.