Take a fresh look at your lifestyle.

மன்னார் நீதிமன்றம் முருங்கன் ஆரம்ப பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு இடைக்கால தடை

91

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்திற்கு, மன்னார் நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடைவித்துள்ளது.

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபர், வங்காலை பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் முன்னெக்கப்பட்டது.

முருங்கன் ஆரம்ப பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, குறித்த இடத்தில் காவல்துறையினரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

குறித்த பாடசாலை அதிபர், தனது கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களேயான நிலையில், அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமையினால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆரப்பாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, காவல்துறையினர் மன்னார் நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.