Take a fresh look at your lifestyle.

ரதன தேரர் இன்று பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு வருகை தரவில்லை

41

அபே ஜனபலய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வேதினியாகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாக அதுரலிய ரதன தேரர் செய்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் நேற்று (22) விசாரிக்கப்பட்டது.

அதன் பின்னர் அதுரலியே ரதன தேரர் வசிக்கும் ராஜகிரிய சந்தஹம் சேவன விஹாரைக்கு கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய அதிகாரிகள் சென்ற போது அவ்வேளையில் தேரர் அங்கு இருக்கவில்லை.

இதனையடுத்து கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர், ரதன தேரரை தொலைப்பேசியில் அழைத்து கலந்துரையாடி கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு வருமாறு அழைத்த நிலையில் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இன்று காலை 9 மணிக்கு வேதினியாகம விமலதிஸ்ஸ தேரரின் இணைப்பு செயலாளர் உனுப்பிட்டிய சந்ரசிறி தேரர் கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு சென்ற போதும் ரதன தேரர் அங்கு வருகைத் தந்திருக்க வில்லை.

இதன்போது உனுப்பிட்டிய சந்ரசிறி தேரர் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கருத்து தெரிவிக்கையில், ரதன தேரர் விசாரணை அதிகாரிகளுக்கு இன்று மாலை வாக்குமூலம் வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.