Take a fresh look at your lifestyle.

‘யகா சம்பத்’ கைது

4 106

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினராக கருதப்படும் ´யகா சம்பத்´ என அழைக்கப்படும் ரீரிகம ராஜபக்ஷ கெதர ஆனந்த சில்வா ஹொரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் வைத்து இன்று (22) மாலை அவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாதாள உலகக்குழு உறுப்பினராக கருத்தப்படும் ´கராடே தம்மிக´ என்ற நபரின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து ரிவோல்வர் ஒன்றும், வாள்கள் இரண்டும், மன்னா கத்தி ஒன்றும், இரும்பு பொல்லுகள் இரண்டும் மற்றும் போலியான வாகன இலக்கத்தகடுகள் இரண்டும் மற்றும் 4 கிராம் 300 மில்லிகிராம் ஹேரோயினும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் நாளைய தினம் (23) கடுவலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.