Take a fresh look at your lifestyle.

அனகாரிக தர்மபாலவின் 156ஆவது நினைவு தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

31

சிங்கள பௌத்த சமூகத்தை பாதுகாப்பதற்காக ஒரு பாரிய புரட்சியில் ஈடுபட்டிருந்த அனகாரிக தர்மபாலவின் 156ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு-10, மஹா போதி அக்ர ஷ்ராவக மஹா விகாரையில் இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) பங்கேற்றார்.

வணக்கத்திற்குரிய மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.

தேசிய சிந்தனையில் மறுமலர்ச்சியைக் ஏற்படுத்துவதற்கு ஒரு புரட்சிகர பயணத்தை ஆரம்பித்த அனகாரிக தர்மபாலாவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிரதமர் நினைவு புத்தகத்திலும் ஒரு குறிப்பை வெளியிட்டார்.

பீடத்தின் பிக்குமார்களுக்கு சேவை செய்வோரை பாராட்டும் வகையில் பிரதமரினால் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், ஜப்பானின் தலைமை சங்கநாயக்கர், வணக்கத்திற்குரிய பானகல உபதிஸ்ஸ தேரரினால் பிரதமருக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் சிங்கள பௌத்தயா பத்திரிகையின், அனகாரிக தர்மபாலவின் 156ஆவது நினைவுதின ஆண்டு விழா சிறப்பு வெளியீட்டை பிரதமருக்கு வழங்கினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்