கொரோனாவால் சினிமா துறையும் மிகவும் பாதிக்கப்பட்டது. 5 மாத காலமாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்புகள் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தொடங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடிகரும், டப்பிங் கலைஞருமான Prabeesh Chakkalakkal கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 44 வயதாகும் அவர் கேரளாவின் waste management விழிப்புணர்வுக்காக எடுக்கப்படும் இப்படத்தில் தன்னுடைய காட்சிகள் முடிந்ததும் குழுவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலை குலைந்து சரிந்து விழுந்தவருக்கு நாவறட்சி ஏற்பட்டிருப்பதை கண்டு உடனே தண்ணீர் கொடுத்துள்ளனர். அதன் பின்னும் அவர் சரிந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது.
Prabeeshக்கு ஜோசப் என்ற தந்தையும் ஜான்சி என்ற மனைவியும் தனியா என்ற மகளும் இருக்கிறார்கள். அவரின் இந்த மரணத்தால் படக்குழுவும், குடும்பத்தினரும் சோக அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.