Take a fresh look at your lifestyle.

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

12

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு காவல்துறையின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன்னதாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள்,  அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த 14 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் பரவல் நிலைமைய கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம் திகதி முதல் நாளை  வரை குறித்த சேவைகளை இடைநிறுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டது.

திங்கள் முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளை மறு தினம் 2ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக இராஜாங்க அமைச்சர் எமது செய்திப் பிரிவுக்கு தெரவித்திருந்தார்.

தற்போது நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்தார்.