Take a fresh look at your lifestyle.

வல்வெட்டித்துறையில் 7 பேருக்கு கொவிட்!

17

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஊரிக்காடு நாவலடி கெருடாவில் வடக்கு கிராம சேவகர் பிரிவில் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடியில் நேற்று 30 பேரிடம் ஏழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே இவ்வாறு 7 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் 95 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.