Take a fresh look at your lifestyle.

மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் யாருக்கு?

14
இலங்கைக்கு இன்று கிடைக்கப்பெற்ற மொடர்னா கொவிட் தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை கொண்டு கண்டி மாவட்டத்திற்காக தடுப்பூசி வேலைத்திட்டத்தின் எஞ்சிய நடவடிக்கைகளை வெற்றிகரமான முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவும் பைஸர் தடுப்பூசியும் ஒரு வகையானவை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கு மேலும் ஒரு தொகை மொடர்னா தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.