Take a fresh look at your lifestyle.

15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

9

அமெரிக்காவினால் கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன.

கட்டாருக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று காலை 9.9க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து கட்டார் டோஹாவிற்கு அனுப்பப்பட்டிருந்த குறித்த மொடர்னா தடுப்பூசிகள் அங்கிருந்து கட்டாருக்கு சொந்தமான கிவ் ஆர் 664 ரக விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பின்னர் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள் அதனை பொறுப்பேற்றதுடன் பாதுகாப்பாக பாரவூர்திகள் ஊடாக மத்திய தடுப்பூசி களஞ்சியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.