Take a fresh look at your lifestyle.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட – விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

20

நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடனமுலாகும் வகையில் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.