Take a fresh look at your lifestyle.

மட்டக்களப்பில் காலாவதியான பெருமளவு உணவுப் பொருட்கள் மீட்பு!

25

மட்டக்களப்பு நகரில், மனித பாவனைக்கு ஒவ்வாத காலாவதியான  உற்பத்தி திகதி பொறிக்கப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் மட்டக்களப்பு நகரிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்ட போதே குறித்த உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டதாக கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெருமளவிவான பொதி செய்யப்பட்ட மரமுந்திரிகை விதைகள், கோதுமை மா, கடலை, பிஸ்கட்டுகள் மற்றும் காலாவதியான போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளன.