Take a fresh look at your lifestyle.

மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

48

அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருட்களை நேற்று (12) மாலை மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த மதுபான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னார் முருங்கன் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மன்னார் சௌத்பார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே நேற்று (12) மாலை மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

பாரஊர்தி ஒன்றினுள் முழுமையாக சுற்றி பியர் போத்தல்கள் அடுக்கி வைத்து சூட்சுமமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி கொண்டுவரப்பட்ட 750 மில்லி லீட்டர் கொண்ட 660 மதுபான போத்தல்கள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவத்தில் அனுராதபுரத்தை சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.