Take a fresh look at your lifestyle.

கல்கிசை சிறுமி விவகாரம் கைதான கடற்படையின் வைத்தியர்.

16

கல்கிசை பிரதேசத்தில் 15 வயதான சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட கடற்படையின் வைத்திய நிபுணரை பணியிலிருந்து இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணையின் முதல் நடவடிக்கையாக  அவர் பணியிலிருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட கடற்படை வைத்தியசாலையில்  இருதய சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்த லெப்டினன்ட் கமாண்டர் தர அதிகாரி நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.