Take a fresh look at your lifestyle.

மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா- 38 குடும்பங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

15

யாழ்-காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே-276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மாப்பிள்ளை தோழனுக்கு (மணமகளின் சகோதரன்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் ,மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 08 பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.