Take a fresh look at your lifestyle.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரம்

18

நாட்டில் இதுவரை 2,971,751 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயிய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயிய் பிரிவு அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் மத்திரம் 20,506 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 15,155 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயிய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 384,047 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதுவரை 114,795 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயிய் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.