Take a fresh look at your lifestyle.

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல்

22

யாழ்ப்பாணம்-மருதனார்மடம் சந்தைக்கு முன்னால் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.