Take a fresh look at your lifestyle.

சில ஆபிரிக்க நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை!

31

கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக சில ஆபிரிக்க நாட்டு பயணிகள், நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த தடையானது ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதற்கமைய அங்கோலா, பொட்ஸ்வானா, லெசோதோ, மொசம்பிக், நமீபியா, சுவாசிலாந்து, சம்பியா மற்றும் சிம்பாம்வே ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தடை விதித்துள்ளது.

அத்தோடு, கடந்த 14 நாட்களாக குறித்த நாடுகளுக்கு சென்றவர்களும், அந்நாடுகளின் ஊடாக பயணித்தவர்களுக்கும் இந்த தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.