Take a fresh look at your lifestyle.

நாட்டில் டெல்டா தொற்றுடன் மேலும் ஒருவர் அடையாளம்

26

கஹதுடுவ-ஜயலியகம பகுதியில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக்க பத்மராஜ தெரிவித்துள்ளார்.

47 வயதான குறித்த நபர், கொழும்பு-கொம்பனிதெரு பகுதியிலுள்ள நிர்மாணத்துறை அலுவலகமொன்றில் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், பொலன்னறுவை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நபரின் மனைவி, மகன் உள்ளிட்ட 50 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான நபர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து, இந்த வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.