Take a fresh look at your lifestyle.

இன்றும் பல இடங்களில் மழை!

28

நாட்டில் இன்றைய தினம் ஊவா மாகாணத்தின் ஒரு சில இடங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு முதல் மாத்தறை வரை காலி வழியாக அமைந்துள்ள கடல் பகுதிகளில் பல மழை பெய்யும். நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் காற்று மேல் நோக்கி வீசும். காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வரையிலும், புத்தளம் முதல் காங்கேசன் வரை மன்னார் வழியாக, கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 50 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து காணப்படும்.

மழை அல்லது இடியுன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.