Take a fresh look at your lifestyle.

இராணுவ வாகனம் விபத்து – இருவர் பலி – நால்வர் காயம்

26

மட்டக்களப்பு – கரடியனாறு- கறுப்பு பாலத்தின் ஊடாக இராணுவ வாகனம்  ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகரை இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.