Take a fresh look at your lifestyle.

டெல்டா வைரஸில் இருந்து மீள எவ்வாறு செயற்பட வேண்டும்?

28
டெல்டா வைரஸ் வகை இதற்கு முன்னர் காணப்பட்ட வைரஸ் வகையிலும் வீரியம் கொண்டது என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார்.

தொற்று நோயிய் பிரிவில் இன்று காலை  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

´எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த தொற்று தொடர்பில் இலங்கையில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கக்கூடும் என்ற தீர்மானத்திற்கு வர முடியும். இவ்வாறான சூழ்நிலையில், சுமார் ஒரு மாத காலத்தில் நோய் வேகமாக பரவ முடியும் என்று சிந்திக்க முடியும்.

பயணக் கட்டுப்பாடு தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும்  தளர்வுக்கான நிபந்தனை உண்டு. இதனால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சிறிய நாடு மீண்டும் முடக்க நிலைக்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டுமாயின் பயணக் கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதையே இந்த சந்தர்ப்பதில் வலியுறுத்த விரும்புகின்றேன்´. என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களம்