Take a fresh look at your lifestyle.

கிளிநொச்சியில் தடுப்பூசி செலுத்திய 48 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு!

27

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெரும்பாலானவர்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் இன்று திடீர் உடல்நலப் பாதிப்பு காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 48 பேர் இவ்வாறு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் இன்று காலை வழமைப்போல தொழிற்சாலைக்கு வருகைத் தந்த நிலையிலேயே இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இவர்களில் எவருக்கும் அபாயகரமான தாக்கம் இல்லையெனவும் சாதாரண நோயாளர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.