Take a fresh look at your lifestyle.

பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பஸில்? ; கசிந்த தகவல்

16

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வாரென அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா சென்று நாடு திரும்பியுள்ள பஸில் ராஜபக்ஷ, சுகாதார வழிக்காட்டலுக்கு அமைய சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், இணையம் ஊடாக முக்கிய சந்திப்புகளை கட்சி செயற்பாட்டாளர்களுடன் அவர் நடத்திவருகின்றார்.

இதன்போது பாராளுமன்ற பிரவேசம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. இதன்படி பஸில் 6 ஆம் திகதி பதவியேற்க வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதற்காக தேசியப்பட்டியல் இடம்பிடித்த அமைச்சர் ரஜித் பண்டார பதவி துறக்கவுள்ளார், சபைக்கு வரும் பஸிலுக்கு நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பொறுப்பேற்ற பின்னர், கெபினட் அமைச்சில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.