Take a fresh look at your lifestyle.

கட்டுமானத்தில் உள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

19

மோட்டர் சைக்கிளொன்றும் காரொன்றும் இன்னும் கட்டுமானத்தில் உள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்து பயணத்த வேளையில் நடந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 19 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டர் சைக்கிளொன்றும் காரொன்றும் அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக உள்நுழைந்து பயணத்த வேளையில் நேற்றிரவு 7 மணியளவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதனையடுத்து இரு வாகனங்களும் தீப் பிடித்து எரிந்துள்ளதுடன், மோட்டார் சைக்களில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் ஐவர் காரில் பயணத்துள்ளதுடன், அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமை மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.