Take a fresh look at your lifestyle.

வரலாற்றில் நீங்கள் எவ்வாறு இடம்பெற போகின்றீர்கள் ..? புதிதாக பிறந்துள்ள உங்கள் பேரன் எதிர்காலத்தில் உங்களை பற்றி ஆடம்பரமாக பேச நீங்கள் எதை விட்டு செல்ல போகிறீர்கள்? ; ஜனாதிபதிக்கு ஹிருணிக்கா கடிதம்

17

தனது தந்தை பாரத லட்சுமண பிரேமச்சந்திராவைக் கொன்றது தொடர்பாக மரண தண்டனையில் இருந்த துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து முன்னாள் எம்.பி. ஹுருனிகா பிரேமச்சந்திர ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஐந்து பக்கங்கள் கொண்ட குறித்த நீண்ட கடிதத்தில் தனது தந்தையில் கொலை தொடர்பான நிகழ்வுகள் மற்றும் அதற்கான நீதியினை பெற போராடியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் தன்னுடைய தந்தை வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். எங்காவது எனது குழந்தைகள் அவர்களின் தாத்தைவை குறித்து ஆடம்பரமாக பேச நிறைய நல்ல காரியங்களை செய்துவிட்டு சென்றுள்ளார். வரலாற்றில் நீங்கள் எவ்வாறு இடம்பெற போகின்றீர்கள் ..? புதிதாக பிறந்துள்ள உங்கள் பேரன் எதிர்காலத்தில் உங்களை பற்றி ஆடம்பரமாக பேச நீங்கள் எதை விட்டு செல்ல போகிறீர்கள்? என எழுதியுள்ளார்.

மேலும் 69 லட்ச மக்களுக்கு விடையளிக்க நீங்கள் தயாராகுங்கள். உங்களின் இந்த நடவடிக்கையானது, மீண்டும் உங்களுக்கு பின்னர் ராஜபக்ஷ ஒருத்தர் இந்த நாட்டை ஆளுவதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.