Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை

18

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்றைய தினம் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், ஏனைய 77 பேர் சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சிறைச்சாலை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இவ்வாறு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.