Take a fresh look at your lifestyle.

ஓட்டமாவடியில் இதுவரை 729 கொரோனா உடல்கள் அடக்கம்!

28

கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று  மாலை வரை 729 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

குறித்த மையவாடியில் இதுவரை 690 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளதுடன் 15 இந்து உடல்களும், 15 கிறிஸ்தவ உடல்களும் 07 பௌத்த உடல்களும், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 729 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.