Take a fresh look at your lifestyle.

ஜூன் 14 ஆம் திகதி நீக்கப்படவிருந்த பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டதன் காரணம் தெரியுமா? ; ஜனாதிபதி தெரிவிப்பு

51

கொரோனா ஒழிப்பு விசேட குழு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (19.06.2021) முற்பகல் கூடி கலந்துரையாடியது.

குறித்த சந்திப்பில் இம்மாதம் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்கவிருந்ததாகவும், அதற்கு முன்னதாக 11 ஆம் திகதி 101 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டமையின் நிமிர்த்தமாக பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டி ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 11 ஆம் திகதி மரணித்ததாக கூறுவதாக இருந்தால், இம்மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியில் இருந்து அடுத்த நாளாகிய 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையே ஒரு நாளுக்கான கால எல்லையாகும்.

வெளியிடப்பட்டிருந்த குறித்த அறிக்கையில் பதிவாகிய முதலாவது மரணமானது பெப்ரவரி 6 ஆம் திகதியே இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 6 ஆம் திகதியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டு மரணச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

மற்றையவர் 67 வயதான ஹோமாகமவை சேர்ந்தவர். அவர் ஏப்ரல் முதலாம் திகதி மரணித்துள்ளார். எனினும், அந்த மரணமும் ஜுன் 11 ஆம் திகதி என்றே கணக்கில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சிகளுக்கு இந்த தகவல்களை வழங்கும் நிபுணர்களுக்கு இந்த விடயங்கள் தெரியாது.

சரியான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அண்மையில் நான் கூறி இருந்தேன். அவ்வாறு செய்த பின்னர் தற்போது இரண்டு பட்டியல்களிலும் பாரியமாற்றம் காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூன் 11 ஆம் திகதி 101 பேர் மரணித்ததாக கூறப்பட்ட போதிலும் அன்றைய தினம் 15 பேரே மரணித்துள்ளதாக ஜனாதிபதி குறித்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் அவ்வாறே அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வரையறுக்கப்பட்ட பணியார்களுடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வது நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் பொறுப்பாகும்.

வர்த்தக மற்றும் பொருளாதார செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்ட சிலரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.