Take a fresh look at your lifestyle.

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவர் கைது!

34

தீக்கிரையான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி இன்று  குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் இன்று  காலை அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.